மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை

🕔 August 27, 2018

ரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் மேற்படி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடலாசிரியரும் அறிவிப்பாளருமான சுனில் விமலவீர என்பவருக்கே இந்த வாழ்த்து அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலைஞரின் மகளான அபிஷேகா விமலவீரவும் பிரபலமான பாடகியாவார்.

மரணமடைந்த கலைஞருக்கு பிரதமர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிறந்த ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் சென்றுள்ள நிலையிலேயே, இந்த வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Comments