மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம்

🕔 September 7, 2015

Ampara dist sports - 002
– றியாஸ் ஆதம் –

அம்பாரை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட, விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான, மாவட்ட மட்ட விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவின் காலை நிகழ்வுகளில், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது அம்பாரை பிரதேச செயலக அணி மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் 81 புள்ளிகளைப்பெற்று முதலாமிடத்தினையும், தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலக அணி 54 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

இதேவேளை, நேற்று நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டி ஆண்கள் பிரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி அதிகூடுதலான புள்ளிகளைப்பெற்றுக் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளின் போது, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.Ampara dist sports - 004Ampara dist sports - 001Ampara dist sports - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்