ஜனாதிபதியின் பிறந்தாளில் ‘துஆ’ பிரார்த்தனை

🕔 September 4, 2015
Fowzi MP - 02
– அஸ்ரப் ஏ . சமத் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64ஆவது பிறந்த தினத்தினையொட்டி, நேற்று வியாழக்கிழமை, முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் ‘துஆ’ பிராத்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.

கொழும்பு புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியிலுள்ள  ஜூம்ஆப் பள்ளி வசாலில், நேற்று லுகா் தொழுகையின் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் சுபீட்சத்துக்கும் ஜனாதிபதிக்கும் நலனுக்குமாக துஆப் பிரத்தனை மேற்கொள்ளப்பட்டது. இந்த துஆப் பிராத்தனையை மொலவி அப்துல் ரஹ்மான் நிகழ்த்தினாா்.

இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சா் எம்.எல்.ஏ எம். ஹிஸ்புல்லாஹ், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான்  மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் கொழும்பு மத்திய அமைப்பாளரும் பலஸ்தீனத்துக்கான இலங்கைத் துாதுவராகச் செல்லவுள்ளவருமான பௌசான் அன்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 03 செப்டம்பர் 1951 ஆம் ஆண்டு பிறந்தார்.Fowzi MP - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்