பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு, அர்ஜுன் அலோசியஸ் பணம் கொடுத்தார்; நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 June 8, 2018

ர்ஜூன் அலோசியஸின் டப்ளியு.எம். மென்டிஸ் அன் கம்பனி நிறுவனத்திடமிருந்து ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க  03 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளைப் பெற்றுக் கொண்டதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மூன்று தடவை தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை, ராஜாங்க அமைச்சர் பெற்றுக் கொண்டதாகவும் இதன்போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காசோலைகளில் ஒன்றினை பிரதியமைச்சரின் பாதுகாப்பு அணியிலிருந்த முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர், கொம்பனித் தெருவிலுள்ள வங்கியொன்றில் 2015ஆம் ஆண்டு காசாக மாற்றியுள்ளார்.

ஏனைய இரண்டு காசோலைகளையும் பிரதியமைச்சரின் பாதுகாப்பு அணியிலுள்ள இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வங்கிகளில் காசாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மேற்படி பணத்தினை தேர்தல் பிரச்சாரத்திற்கு ராஜாங்க அமைச்சர் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத் தலைவர் அர்ஜுன் அலோசியஸ், இவ்வாறு அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்