புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

🕔 August 31, 2015

parliament of srilanka - 01புதிய நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை கூடவுள்ளது. இதன்போது, உறுப்பினர்கள் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென நாடாளுமன்ற செயலாளர்  டப்ளியு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான, நிரந்தர ஆசன வரிசைகள் உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.

இலங்கையின், 08 ஆவது நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

நாளைய தினம், சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், நாடாளுமன்றின் புதிய உறுப்பினர்கள் – சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்