சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

🕔 August 28, 2015

SLFP - 01புதிய நாடாளுமன்றத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் யார் என, இன்றைய தினம் அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன்போது, புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரமும், இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

புதிய அரசாங்கத்தில் – விவசாயம், நீர்ப்பாசனம், மின் மற்றும் எரிசக்தி அமைசர்சர் பொறுப்புக்கள் சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்