இயக்குநர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன தங்கமயில் பதக்கம், பஸ்ஸில் இருந்து கண்டெடுப்பு

🕔 May 5, 2018

புகழ் பெற்ற இயக்குநர் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல்போன தங்கமயில் பதக்கம் கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வழி இலக்கம் 177 கடுவளை – கொள்ளுப்பிட்டி வீதியில் பயணிக்கும் பஸ்ஸில் இருந்து இன்று சனிக்கிழமை முற்பகல் குறித்த பதக்கம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு ‘கம்பெரலிய’ என்ற திரைப்படத்துக்காக 1965ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் வைத்து வழங்கப்பட்ட தங்க மயில் என்ற பதக்கம் அண்மையில் காணாமல் போனது.

லெஸ்டர் பீரிஸ் காலமானதையடுத்து அவரின் உடல்  பொதுமக்கள் அஞ்சலிக்கு வைவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பதக்கமும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பதக்கம் மாயமாகியுள்ளதாக குடும்பத்தினர் சார்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பதக்கம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்