புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம்.

🕔 April 27, 2018

க்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாகஇ ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்றிருந்த அவர் நாடுதிரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடபவியலாளர்களைச் சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மறுசீரமைப்பு என்ற பெயரில் சிறிய விடயங்களை மாத்திரம் மேற்கொண்டு தனிநபர்களை அல்லது சிறுகுழுக்களை பாதுகாக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவ்வாறு செயற்பட்டால் கட்சி கடுமையாக பாதிக்கப்படும். இந்தவிடயத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

புற்றுநோய் உள்ளவருக்கு அதற்காகச் சிகிச்சையளிப்பதற்குப் பதிலாக, அவருக்கு தடிமன் மருந்து கொடுப்பது நிவாரணமாகாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்