முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்

🕔 April 20, 2018

முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையிலான மீற்றர் பொருத்தும் நடைமுறை, இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது.

அதேவேளை, பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிணங்க 0112 69 68 90 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும்.

முச்சக்கர வண்டிகளில் ஒரே தூரத்துக்கு பல்வேறு வகையான கட்டணங்கள் அறவிடப்படுகின்றமையினால், இந்த திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்