பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்தது

🕔 April 12, 2018

ல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

20 வீதமான ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து, பெப்ரவரி 27ஆம் திகதி முதல், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு கூறியுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் ஏப்ரல் 17ஆம் திகதிக்கு முன்னர் வேலைக்குத் திரும்பாது விட்டால், பின்விளைவுகளைச் சந்திக் நேரிடும் என, நேற்று புதன்கிழமை உயர்கல்வி அமைச்சு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தகுதிகாண் காலத்திலும், ஒப்பந்த, தற்காலிக மற்றும் பயிற்சி அடிப்படையிலும் கடமையாற்றுவோர் ஏப்ரல் 17ஆம் திகதிக்கு முன்னர் வேலைக்கு திரும்பாது விட்டால், அவர்கள் தொழில்களில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்