அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

🕔 April 11, 2018

புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு தினங்களில் பதவியேற்கும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ளது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“புதிய அமைச்சரவை பதவியேற்றாலும் பல அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது.

அமைச்சரவையில் இருந்து சிலரை நீக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். அவர்களை நீக்கிய பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.

பிரதமருக்கு எதிராக செயற்பட்ட எவருக்கும் அமைச்சரவையில் இருக்க முடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்