ஐ.தே.க. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையில்லை; கட்சியின் செயற்குழு தீர்மானம்

🕔 April 7, 2018

க்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தற்போது மாற்றம் செய்யத் தேவையில்லை என்று, அந்தக் கட்சியின் செயற்குழுவிலுள்ள பெரும்பான்மையோர் தீர்மானத்துள்ளனர் என்று, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான சிபாரிசுகளை வழங்கும் பொருட்டு, அந்தக் கட்சியைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மற்றும் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காரியவசம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவடைந்ததன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என, அந்தக் கட்சியின் உள்ளேயும், அரசியலரங்கிலும் பாரிய எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையிலேயே, தற்போது தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யத் தேவையில்லை என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்