பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம்

🕔 April 5, 2018

டையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரித்தானிய பிரஜையொருவரும் மற்றுமொரு நபரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துருவெல்ல – கொஸ்கொட பகுதியில் மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முகம்மட் இஸ்மாயில் (68 வயது) எனும் பிரித்தானியப் பிரஜையும், அதுருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமன் பெரேரா என்பவரும் இதன் போது காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கும் வேளையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த சமன் பெரேரா என்பவர் பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவர் என, கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமன் பெரேரா என்பவருடன் பாதிக்கப்பட்ட பிரித்தானிய பிரஜை வியாபார நடவடிக்கையை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்