தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை

🕔 April 4, 2018

– மப்றூக் –

க்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, தமிழில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வாக்களித்தமை, சபையில் பாரிய சிரிப்பொலியை ஏற்படுத்தியது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர், தாம் பிரேரணைக்கு ஆதரவளிக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில், தங்கள் பெயர் அழைக்கப்பட்ட போது, “இல்லை” எனக் கூறி, வாக்கினைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பெயர் அழைக்கப்பட்ட போது, அவர்; “இல்லை” என்று தமிழில் கூறி, பிரேரணைக்கு எதிராக தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

சுஜீவ இவ்வாறு தமிழில் “இல்லை” என்று கூறியதும், சபையில் பெருத்த சிரிப்பொலி எழுந்தது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்