ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு

🕔 March 21, 2018
க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது.

இதில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதே வேளை, உப நிகழ்வுகளும் பாதிக்கபட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகின்றன.

அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு நடத்தப்பட்டது. நிகழ்வுக்கு முயீஸ் வஹாப்தீன் தலைமை தாங்கினார்.

நேற்று செவ்வாய்கிழமை மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த அமர்வில், முஸ்லிம்கள் மீதான இனவாததத் தாக்குதல்கள் பற்றிய  ஆவணப்படம் திரையிடப்பட்டதோடு சிறப்பு விளக்கங்களும் வழங்கப்பட்டன.

முஸ்லிம்களின்  மீது மிலேச்சத்தனமாக தாக்கிய காடையர்களை பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது நடவைடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அத்தோடு பொலிஸ் துறை மீள் கட்டமைப்பு செய்யப்படவேண்டும் எனவும் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மத வழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா பிரதிநதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் சார்பில் முஹ்லிஸ், றஹ்மான், இன்சாப் ஆகியோரும், இலங்கை முஸ்லிம் பிரதிநிதியாக ஊடகவியலாளர்  பஹத் ஏ.மஜீத், சட்டத்தரணி பாயிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்