தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது

🕔 March 15, 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டாவது  பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும்  ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விழா தொடர்பான  அனைத்து ஏற்பாடுகளையும் பலகலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

வெளிவாரி படிப்பை நிறைவு செய்த 510  மாணவர்கள், முகாமைத்துவ முதுமாணி  பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 19 பேர் உட்பட, மொத்தம் 950 பேர் இவ்வருடம் பட்டங்களைப்பெறுகின்றனர்.

இந்தப் பட்டமளிப்பு விழா, மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பட்டமளிப்புக்கான சீருடை, பட்டமளிப்பு மாலை மற்றும் அனுமதிச்சீட்டு ஆகியவற்றினை, நாளை மறுதினம் சனிக்கிழமையன்று – ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், காலை 9.30 முதல் மாலை 3.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாமென பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பன்று நடைபெறும் பட்டமளிப்பு ஊர்வலம் காலை 7.45 மணிக்கு ஆரம்பமாகும் என்பதால், பட்டம் பெறும் சகல மாணவர்களும், அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு சமூகமளிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்