நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்

🕔 March 15, 2018

ட்ஸ்ஸப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தத் தடை நீக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையில், செவ்வாய்கிமை நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டது.

தற்போது, வட்ஸ்ஸப் மீதான தடை நீங்கியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொடக்கம், பேஸ்புக் மீதான தடை நீக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, பேஸ்புக் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்வதற்காகவும், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டும், பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்