ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின

🕔 March 13, 2018

– முன்ஸிப் அஹமட் –

ப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன.

அந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது, பார்வையாளர் பகுதியின் முன் வரிசை இருக்கையில் ஞானசார தேரர் அமர்ந்திருக்கின்றமை, படங்களில் பதிவாகியுள்ளன.

ஜப்பானிலுள்ள இம்பேரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக, படங்களின் மூலம் அறிய முடிகிறது.

ஜப்பான் – டோக்கியோவிலுள்ள இதே ஹோட்டலில், இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், முதலீட்டு மாநாட்டு நிகழ்வொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, இந்த முலீட்டு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்