முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

🕔 March 11, 2018

– லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் –

லங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும், ஹைட் பார்க் கார்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான இலங்கைத்  தூதுவராலயத்துக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் அமைப்பு, இந்த கவனஈர்ப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களை கண்டிப்பதுடன்,  மதகுருமார் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு அவற்றினை மேற்கொண்ட  காடையர்களையும், இன விரிசலைத் தூண்டி அதில் குளிர்காயும் அரசியல் வாதிகளையும் தாம் கண்டிப்பதாக, மேற்படி கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

Comments