அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம்

🕔 March 6, 2018

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மத்திய மாகாணத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் முழுவதும் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான முஸ்லிம்கள் பெரும்பான்மைகயாக வாழும் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை, இன்று காலை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய ஊர் மக்கள், வன்முறைகளால் பாதிக்கப்கப்பட்ட திகன, தெல்தெனிய உள்ளிட்ட முஸ்லிம் மக்களுக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின்  பல பகுதிகளில் டயர்களை எதிர்த்தும், கற்களைப் போட்டும் மக்கள் வீதித் தடையினை ஏற்படுத்தியுள்ளனர்.

ஹர்த்தால் நடவடிக்கை காரணமாக இந்த பிராந்தியத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், அரச  அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, வாகனப் போக்குவரத்துக்குளும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்