உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

🕔 February 27, 2018

புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவே, இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில் 340 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம்மாதம் 10ஆம் திகதி நடைபெற்றது.

இதில் தெரிவான உறுப்பினர்கள் எதிர்வரும் 06ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து  கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே, எதிர்வரும் 20ஆம் திகதி வரை, புதிய பிரதேச சபைகளைத் தொடங்கும் காலம் பிற்போடப்பட்டுள்ளது.

Comments