சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்?

🕔 August 20, 2015

Question mark - 09ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரமிக்க உயர்மட்ட அரசியல்வாதியொருவர், ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நடந்து முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த நபர், 01 லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எனக் கூறப்படகிறது.

மேற்படி நபர், அமையவுள்ள ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவையாகவுள்ள நிலையில், நடைபெற்று முடிந்த  தேர்தலில், ஐ.தே.முன்னணி சார்பாக 106 உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்