தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம்

🕔 August 20, 2015

SLFP - 012தேசிய அரசாங்மொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தினை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவானது, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான
அங்கீகாரத்தினைப் பெறும் பொருட்டு, 06 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றினை, இன்று வியாழக்கிழமை அமைத்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க தலைமையிலான மேற்படி விசேட குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், ஒரு தசாப்பதத்துக்குப் பின்னர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்