பிரதமரை பதவி நீக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது: அமைச்சர் வஜிர

🕔 February 16, 2018

பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று, பொது நிருவாக அமைச்சர் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளிட்ட போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நாலரை வருடங்கள் நிறைவடையும் வரையில், அதனைக் கலைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணை இன்னுமுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்