அடுத்தவரின் ‘மலம்’ முகரப் போன அவசரத்தில், அசிங்கப்பட்டுப் போன ஹசீர்; தமையன் போல் உளறுகிறார்

🕔 February 9, 2018

– அஹமட் –

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ரஊப் ஹசீர்; மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பேசப் போய், அசிங்கப்பட்டுப் போயுள்ளார் என, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பானது மயில் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் விகிதாசார பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்,   எம்.ரி. ஹசனலிக்கோ, பஷீர்  சேகுதாவூத்துக்கோ இல்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர்தான் – அவருடைய கட்சித் தலைவரின் வழிகாட்டுதலுடன் அதனை முடிவு செய்வார்’ என்று தனது பேஸ்புக் பக்கத்தில் ரஊப் ஹசீர் எழுதியுள்ளார்.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரசுக்கான பட்டியல் உறுப்பினர்களை அந்தக் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரே தீர்மானிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை, பிரதேச வாதத்துடன் விளக்கி, கிழக்கு மக்களை உணர்வூட்ட முயற்சிக்கும் ஹசீர்; ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பட்டியல் உறுப்பினர்களை குருநாகலை சேர்ந்த மயில் கட்சி செயலாளர் நியமிக்கும் நிலையில், மு.காங்கிரசுக்கான பட்டியல் உறுப்பினர்களை கிழக்கைச் சேர்ந்த நிஸாம் காரியப்பர்தான் நியமிப்பார்’ என விபரித்துள்ளார்.

கொஞ்சம் அப்பட்டமாகச்சொன்னால், அடுத்தவனின் ‘மலத்தை’ முகரப் போன அவசரத்தில், தமது நிலை பற்றி யோசிப்பதற்கு ரஊப் ஹசீர் – முற்றிலுமாகத் தவறிப் போய் அசிங்கப்பட்டுள்ளார்.

அதாவது, அவரின் சகோதரரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீம்; அண்மைக் காலமாக உளறிக் கொட்டுவதைப் போல், ஹசீரும் தனது பேஸ்புக் பக்கத்தில், மூளைக்கும் விரல்களுக்கும் தொடர்புகளற்று கிறுக்கியுள்ளார்.

விடயம் என்னவென்றால், முஸ்லிம் காங்கிரசின் தளமான அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான் போட்டியிடுகிறது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், இலங்கை முழுவதும் ஐந்து சின்னங்களில் போட்டியிடும் மு.காங்கிரஸானது, வெகு  சில இடங்களில் மட்டும்தான் தனது மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களை மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பரால் தீர்மானிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம், அவருடைய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுடன்தான் அந்த உறுப்பினர்களை நியமிப்பார். அதாவது, ஹசீரின் பாசையில் சொன்னால்,  மு.காங்கிரசின் பட்டியல் உறுப்பினர்களைத் தீர்மானிப்பவரும் கிழக்கான் அல்ல.

மு.காங்கிரசின் தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்க வேண்டும் என்கிற கோசம், உச்ச அளவில் எழுந்துள்ள நிலையில், அந்தக் கோசத்தினை மழுங்கடிக்கும் நோக்குடன்தான், மேற்கண்ட பேஸ்புக் பதிவினை ஹசீர் எழுத முயற்சித்துள்ளார்.

ஆனாலும், ஹசீர் குறிப்பிட்டு எழுதியுள்ள விடயமானது, ஒரு பூமரங் (boomerang) போல் சுற்றி வந்து, அதை எறிந்தவரின் முகத்தையே அடித்துக் காயப்படுத்தியிருக்கிறது.

‘எதையும் எழுதுவதற்கு முன்னர், கொஞ்சம் ப்ளான் பண்ண வேண்டும்’ என்பது இதற்குத்தான்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்