கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார்

🕔 February 6, 2018

– அஹமட் –

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினை அடுத்து, அவர் – நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

முன்னதாக, பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர், சபையிலிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு முகமன் கூறிக் கொண்டார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், இஸ்லாமிய நடைமுறைக்கு முரணாக கையெடுத்துக் கும்பிட்டதாகக் கூறப்படும் புகைப்படமொன்று வெளியாகி, அது தொடர்பாக சமூக வலைத்தலங்களில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட முதல் நாளன்றே, நசீர் இவ்வாறு சர்ச்சையில் சிக்கிக் கொண்டமை கவனத்துக்குரியதாகும்.

நாட்டின் உச்ச சபையொன்றின் உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் போது, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கூர்ந்த பார்வைக்குள் சிக்கிக் கொள்ளும் நிலைவரம் ஏற்படுவதால், இவ்வாறான விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments