08 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினார் மயோன் முஸ்தபா; நீதிமன்றிலும் ஆஜரானார்

🕔 February 2, 2018

ஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகாமல், வெளிநாட்டில் வசித்து வந்த, முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு கோரி, தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவரும், விமல் வீரவன்சவின் சகாவுமான முகம்மட் முசம்மில் என்பவருக்கு, 42 லட்சம் ரூபாவை மயோன் முஸ்தபா லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், குறித்த வழக்கில் ஆஜராகி, பிணையில் விடுதலையான மயோன் முஸ்தபா, நாட்டை விட்டும் வெளியேறியிருந்தார்.

இதனையடுத்து, கடந்த 08 வருட காலமாக பிரித்தானியாவில் வசித்து வந்த மயோன் முஸ்தபா, நாடு திரும்பிய நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தனது சட்டத்தரணி மூலமாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் ஆஜரானார்.

எவ்வாறாயினும், கடந்த 06 மாதங்களுக்கு முன்னரே, மயோன் முஸ்தபா நாடு திரும்பியிருந்தார் என அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்