தலைப்புச் செய்திகள்

தீயில் எரிந்து, வியாபார நிலையங்கள் முற்றாக நாசம்; அதிகாலை சம்பவம்

– க. கிஷாந்தன் –

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் பாதிக்கப்படவில்லை. ஆயினும், பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.