பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு

🕔 January 4, 2018

பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்க தொடர்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக, அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்பு கொள்வதற்காக, அவரின் வீட்டு தொலைபேசிக்கு ஊடகமொன்று அழைப்பினை மேற்கொண்டபோது, ரவியின் சட்டத்தரணி பதிலளித்தார்.

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் மத்திய வங்கி இருக்கவில்லை என, இதன்போது அவரின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு உதவும் வகையில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வாக்கு மூலம் வழங்கினார் எனத் தெரிவித்துள்ள அவரின் சட்டத்தரணி; ரவி கருணா நாயக்க பொய்யான வாக்கு மூலம் வழங்கியதாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையினை நிராகரிப்பதாகவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்