தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

🕔 August 14, 2015

Vote - 01நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

அந்தவகையில், இன்று நள்ளிரவின் பின்னர் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள், சட்ட விரோதமானவையாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வேட்பாளர்களின் தொகுதிவாரியான அலுவலகங்கள் அனைத்தும் நாளை சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், ஒவ்வொரு வேட்பாளரும், தமக்கென ஒரு மாவட்டக் காரியாலயத்தினை செயற்பாட்பாட்டில் வைத்திருக்க முடியுமென,தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்