மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல்

🕔 December 21, 2017

– எஸ். அஷ்ரப்கான் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செயற்ட, எஸ். சுபைர்டீன் என்பவருக்கு  தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியமைக்கு எதிராக, நேற்று புதன்கிழமை அக்கட்சியின் ஸ்தாகத் தவிசாளர் வை.எல்.எஸ். ஹமீட், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

6/2017. என்ற வழக்கு இலக்கத்தில் மேற்படி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

எஸ். சுபைர்தீன் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற, அ.இ.ம. காங்கிரஸ் சார்பான தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அதிராக, அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவற்றினை நிரகரிப்பதற்கான இடைக்கால உத்தரவு வழங்குமாறு, தனது மனுவில் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு வின் உத்தரவுக்கெதிராக தற்காலிக தடை உத்தரவு, மற்றும் நிரந்தர உத்தரவு போன்றவை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால்,  சம்மந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு வை.எல்.எஸ். ஹமீட்டின் சட்டத்தரணியினால் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, அதன் அங்கத்தவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் எஸ். சுபைர்தீன் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்