சாய்ந்தமருதில் வேட்பாளர்களை, மக்கள் காங்கிரஸ் களமிறக்காது: பிரதித் தலைவர் ஜெமீல், அதிரடி அறிவிப்பு

🕔 December 18, 2017

ல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப்போவதில்லை என்று, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எம்.ஏ. ஜெமீல் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள நிலையில், அக்குழுவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே, இந்தத் தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாகவும் ஜெமீல் கூறினார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, எந்தவொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு சாய்ந்தமருது பிரதேசம் ஆதரவளிப்பதில்லை என, அந்த ஊரின் பெரிய பள்ளிவாசல் நிருவாகம் தீர்மானித்திருந்தது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தற்போது களமிறக்கியுள்ளது.

அந்த சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவினை வழங்குவதற்காகவே, சாய்ந்தமருது பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்களை களமிறக்குவதில்லை எனும் தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக ஜெமீல் கூறினார்.

தமது இந்த நிலைப்பாடு குறித்து, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபாவுக்கு, எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் ஜெமீல் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் ஜெமீல், சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்