தலைப்புச் செய்திகள்

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இன்று திங்கட்கிழமை  – பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது, அரச நிதியை மோசடி செய்ததாக, இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், வாக்கு மூலம் வழங்குவதற்காகவே, இவர் அங்கு ஆஜராகினார்.

ஏற்கனவே, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் நிதியினை, முறைகேடாகப் பயன்படுத்தி சில் துணியினைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.