எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு

🕔 December 8, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பது தமது நோக்கம் கிடையாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைவதில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரும்பமில்லையா” என ,கபீர் ஹாசீமிடம், கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த போதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார்.

மேலும், ஜனநாயகக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கும், அவற்றினைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளையே ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருவதாகவும் இதன்போது கபீர் ஹாசீம் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, எந்தவொரு கட்சியையும் பிளவுபடுத்த வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது என்று தெரிவித்த கபீர் ஹாசீம், விரும்பியவர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் தமது விருப்பமாகும் என்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்