பிணை முறி விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் நாளை கையளிக்கப்படுகிறது

🕔 December 7, 2017

த்திய வங்கியின் பிணை முறி வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாபதி ஆணைக்குழுவின்  அறிக்கை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேற்படி ஆணைக்குழுவானது பிணை முறி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட, 01 பெப்ரவரி 2015 தொடக்கம் 31 மார்ச் 2016 வரையிலான காலப்பகுதியின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

பிணை முறி விவகாரம் தொடர்பிலான சாட்சிகள் மற்றும் ஆவணங்களை மையப்படுத்தி 10 மாதங்கள் மேற்படி விசாரணை இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், குறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளான கே.ரி. சித்ரசிறி (தலைவர்), பிரசன்ன ஜயவர்த்தன ஆகியோரும் முன்னாள் பிரதி கணக்காளர் நாயகம் கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்