கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை

🕔 November 29, 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தன்னை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

டிசம்பர் 06ஆம் திகதி வரை இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டாவின் தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவின் பெயரில் அருங்காட்சியகம் ஒன்றினை நிர்மாணிக்கும் பொருட்டு, அரச நிதியை கோட்டாபய ராஜபக்ஷ துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், அவருக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே, இந்த இடைக்காலத் தடையினை அவர் பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்