தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 November 28, 2017

ள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள 93 சபைகளிலும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர், இந்த கால எல்லைக்குள் விண்ணப்பிக்க முடியும்.

மேலும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும், முடிவுத் திகதிக்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்