எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை

🕔 November 27, 2017

ல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானியை செல்லுபடி அற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போது, குறித்த வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தும் வகையில், வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி தடையுத்தரவு காரணமாக, அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை நடத்த முடியாதுள்ளதாகவும், மக்களின் வாக்களிக்கும் உரிமை இதனால் பாதிக்கப்படுவதாகவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான துறைசார் அமைச்சரினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடைய, எதிர்வரும் டிசம்பவர் 04 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்