தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம்

🕔 November 27, 2017

ள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவதற்குத் தேர்மானிக்கப்பட்டுள்ள 93 சபைகளுக்குமான தெரிவத்தாட்சி அலுவலர்கள் இதற்கான அறிவிப்பினை விடுப்பார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இன்று திங்கட்கிழமை முதல், எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகல் வரை செலுத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்