நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர், நாமலுக்கு அழைப்பு

🕔 August 10, 2015

Namal Rajapakse - 01முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ – விசாரணையொன்றின் நிமித்தம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பினவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், நாமல் ராஜபக்ஷ – தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று திங்கட்கிழமை காலை, எரிச்சலுடன் பதிவொன்றினை இட்டுள்ளார்.

‘எனது பிரசார நடவடிக்கைகளை குழப்பும் மற்றுமொரு நடவடிக்கையாக, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று, விசாரணையொன்றுக்கு வருமாறு – நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர், என்னை அழைத்துள்ளனர். இந்தத் தேர்தல் தந்திரமெல்லாம் வெற்றிபெறப் போவதில்லை’ என்று, தனது ட்விட்டர் பக்கத்தில், நாமல் ராஜபக்ஷ பதிவு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்