மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்; கடந்த வருடம் அரையாண்டில் மட்டும் 154 கோடி ரூபாய் நஷ்டம்

🕔 November 19, 2017

த்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினால் 2016ஆம் ஆண்டு, முதல் அரையாண்டு காலத்தில் மட்டும் 154 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டதாக கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான நிலையத்தை இயக்குவதற்காக கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஜுன் வரையில் மட்டும் 114 கோடியே 73 லட்சத்து 73 ஆயிரத்து 705 ரூபாய் செலவாகியுள்ளது. அதேவேளை மேற்படி காலப்பகுதியில் இந்த விமான நிலையம் மூலம் 02 கோடியே 16 லட்சத்து 51 ஆயிரத்து 104 ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்துள்ளது.

இந்த நஷ்டமானது 5199 வீதமாகும்.

கடந்த 2015 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் குறித்த விமான நிலையம் நஷ்டத்திலேயே இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2015ஆம் ஆண்டு சுமார் 310 கோடி ரூபாயும், 2014ஆம் ஆண்டு 272 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது.

புதிது பேஸ்புக் பக்கம்