சண்டே லீடர் நிறுவனம் மூடப்பட்டது; பணியாளர்களின் 04 மாத சம்பளத்துக்கு கல்தா

🕔 November 17, 2017

பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சண்டே லீடர் உள்ளிட்ட செய்தித்தாள்களை வெளியிடும் ‘லீடர் வெளியீட்டகம்’ மூடப்பட்டள்ளதாகத் தெரியவருகிறது.

இதன் காரணமாக குறித்த வெளியீட்டத்தினூடாக வந்து கெண்டிந்த பத்திரிகைகளான சண்டே லீடர் மற்றும் இருதின ஆகியவை நின்று போயுள்ளன.

குறித்த நிறுவனம் நொவம்பர் ஆரம்பத்தில் மூடப்படவுள்ளதாக அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அங்கு பணியாற்றியவர்களுக்கு கடந்த 04 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

நிறுவனமொன்றினை மூடுவதாயின் அது குறித்து தொழில் திணக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், அந்த நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தினை முன்கூட்டி வழங்கவும் வேண்டும்.

ஆயினும், இவ்வாறான எவ்வித நடைமுறையினையும் பின்பற்றாமல், லீடர் வெளியீட்டகம் மூடப்பட்டுள்ளது.

ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட புகழ்பெற்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்