பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதற்கு பிரதமர் தீர்மானம்

🕔 November 16, 2017

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பா ஆஜராகுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே, ஆணைகுழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார் என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்