சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

🕔 November 14, 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி தெரிவித்தார்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேசிய போதே, ஜனாதிபதி இந்த உத்தரவினை வழங்கியதாகவும் ஆசாத்சாலி கூறினார்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். இதில் ஆசாத்சாலியும் கலந்து கொண்டார்.

அந்த வகையில், மேற்படி சந்திப்புக் குறித்து ஆசாத் சாலியிடம் நாம் பேசிய போதே, மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.

இந்த சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பிலும், அதன் தேவைகள் குறித்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஜனாதிபதியிடம் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

இதனையடுத்து சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்