‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை

🕔 November 14, 2017

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவரத்தனவுக்கு எதிராக ஊழல் தொடர்பான 09 வழக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்வதற்கு இன்று செவ்வாய்கிழமை தீர்மானிக்கப்பட்டது.

தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்த்தன பதவி வகித்த காலகட்டத்தில், சபைக்கு வாகனங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்ட போது, அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சரண குணவர்த்தன இன்று நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை. வேறொரு வழக்குத் தொடர்பில் – அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

எனவே, எதிர்வரும் வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டுமென, வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகருக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று உத்தரவிட்டார்.

சந்தேக நபர் 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் தேசிய லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்த போது, மேற்படி குற்றங்களைப் புரிந்ததாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்