உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது

🕔 November 11, 2017

ள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சித் தேர்தலினை நடத்துவதாயின் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும்.

இதற்கமைய கடந்த முதலாம் திகதி, இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கையெழுத்திட்டார்.

ஆயினும், குறித்த வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கு அச்சுத் திணைக்கத்துக்கு அனுப்பி வைக்காமல் அமைச்சர் தாமதப்படுத்தி வருவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையிலேயே தற்போது அந்த வர்த்தமானி அறிவித்தல், அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்