நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு

🕔 November 9, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டிகளில் சபைக்கு வருகை தந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் இவர்கள் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.

இன்றைய தினம் 3.00 மணிக்கு நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் பொருட்டு மேற்படி ஒன்றிணைந்த எதிரணியினர் இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த துவிச்சக்கர பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்