நெவஸ்கா லேடியில் வந்த பெற்றோல் சுத்தமானது; இரவுக்குள் விநியோகம் ஆரம்பமாகும்: கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

🕔 November 9, 2017

நாட்டுக்கு நெவெஸ்கா லேடி கப்பலில் கொண்டு வரப்பட்ட பெற்றோல் பாவனைக்கு தகுதியானது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

குறித்த பெற்றோலின் மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்று வியாழக்கிழமை இரவுக்குள் இந்த பெற்றோலினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட பெற்றோலினுள் கண்ணுக்குத் தெரியும்படியான துகள்கள் காணப்பட்டதாகவும், அதனால் அந்த பெற்றோலினை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கள தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்