வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் வழங்குமாறு வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் வாபஸ்

🕔 November 7, 2017

வாகனங்களுக்கு மட்டும் பெற்றோலை வழங்குமாறு எரிபொருள் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபத்தை மீளப்பெற்றுள்ளதாக, எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த சுற்று நிருபம் இன்று செவ்வாய்கிழமை காலை, எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் உத்தரவுக்கிணங்க வெளியிடப்பட்டது.

சந்தைக்கு வழங்குவதற்குரிய போதியளவான பெற்றோல் உள்ளமையினால், குறித்த சுற்று நிருபத்தை மீளப் பெற்றுக் கொண்டதாக, எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்