நபரொருவரை கடத்திய வழக்கு; ஹிருணிகா தவிர்ந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

🕔 November 6, 2017

ண் ஒருவரை தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 2015ஆம் ஆண்டு கடத்தினார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட 09 பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தவிர்ந்த ஏனைய 08 பேரும் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது, குறித்த எட்டுப் பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள்.

ஆயினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தன்மீதான குற்றச்சாட்டினை மறுத்தார்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குற்றத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கான தண்டனையினை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இம்மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்